பொதுவெளியில் தனது காதலருக்கு முத்தம் கொடுக்கும் ஸ்ருதிஹாசன் .!

 
காதலுடன் ஸ்ருதிஹாசன்

நடிகர் ஸ்ருதிஹாசன் தனது காதலுனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூகவலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்திரத்தில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனுவுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவரும் முகக்கவசம் அணிந்துள்ள நிலையில், ஸ்ருதிஹாசன் காதலனை மிகவும் அணைத்ததுடன் மாஸ்க் உடன் முத்தம் தருகிறார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டும் என சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஸ்ருதி தற்போது காதலித்து வரும் சாந்தனு ஹசாரிகா ராப் பாடகராக இருக்கிறார். அவர் ஒரு டூடுல் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web