போன் நம்பர் கேட்ட ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதிஹாசன்..!

 
ஸ்ருதிஹாசன்

சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் தன்னிடம் போன் கேட்டதற்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிவிட்ட பதில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். எனினும் இவர் தமிழை விடவும் தெலுங்கில் தான் மிகவும் பிரபலமாக உள்ளார். தொடர்ந்து அங்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

சினிமாவைக் காட்டிலும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக அவர் இருந்து வருகிறார். தன்னுடைய தினசரி நடவடிக்கைகளை இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் பதிவிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் ஸ்ருதி ஹாசனை டேக் செய்த ரசிகர் ஒருவர் அவரிடம் போன் நம்பர் கேட்டு பதிவிட்டார். அதை டேக் செய்த அவர், 100 என்று போலீசார் அவசர எண்ணை வழங்கியுள்ளார். இது சமூகவலைதளங்களில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

From Around the web