கமல் வயது நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்..!! 

 
ஸ்ருதி ஹாசன்

விரைவில் தெலுங்கில் தயாராகும் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

மருத்துவமனையில் தோள்பட்டை சிகிச்சைக்காக பாலகிருஷ்ணா சிகிச்சை பெற்று வருகிறார். அதை தொடர்ந்து ஏற்கனவே போயபதி சீனு இயக்கும் ‘அகண்டா’ படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

அதை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதை கிராக் படத்தின் மூலம் பிரபலமாக இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘கிராக்’ படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web