ராஜமவுலி - மகேஷ் பாபு படத்துக்கு தேதி குறிச்சாச்சு: எப்போது தெரியுமா..?

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்துக்கான ஷூட்டிங் பணிகள் வரும் ஆகஸ்டு மாதம் முதல் துவங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ss rajamouli

ஆர்.ஆர்.ஆர் என்கிற பிரமாண்டமான படத்தை தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமவுலியின் அடுத்த படத்தின் மீது ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து வருகிறது. முன்னதாக இதுகுறித்து பேசிய ராஜமவுலி, தான் அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். 

இது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படம் தொடர்பாக தகவல்களை ஆராய்ந்தபோது அனுமானின் குணாதிசயங்களை கொண்ட ஒரு ஹீரோவை குறித்த படம் என்று மட்டும் தெரியவந்தது. அதேசமயத்தில் இந்த படம் ஒரு ஜேம்ஸ்பாண்டு பட பாணியில் மிகவும் ஸ்டைலிஷாக தயாராகவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான படம் சர்காரு வாரி பாட்டா. அதை தொடர்ந்து ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘குண்டூர் கிராமம்’ என்கிற படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்ப்டாம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஆகஸ்டு 9-ம் தேதி மகேஷ் பாபுவின் பிறந்தநாள். அன்றைய நாளில் ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்துக்கான பூஜை மற்றும் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் துவங்கப்படவுள்ளன. அடுத்தாண்டு முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. பெரும்பாலான ஷூட்டிங் ஆஃப்ரிக்க நாடுகளில் நடைபெறவுள்ளது.
 

From Around the web