நடிப்பில் ஆர்வங்காட்டும் ராஜமவுலி- விரைவில் அறிவிப்பு..!!

இயக்குநராக உலகளவில் பிரபலமான எஸ்.எஸ். ராஜமவுலிக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்களை பார்க்கலாம்.

 
Rajamouli

பாகுபலி சிரீஸ் படங்கள் மூலமாக ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் தலையெழுத்தையே மாற்றிய பெருமை ராஜமவுலியை சேரும். "லைஃப் லார்ஜர் தென் சினிமாஸ்" என்று ஆங்கிலத்தில் சொல்வதற்கு ஏற்ப, எதார்த்த வாழ்க்கையை கடந்து அண்ணாந்து பார்க்கச் செய்யும் படங்களை அவர் உருவாக்கினார். இதன்மூலம் இந்தியப் படங்களை உலக அரங்குக்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

Rajamouli

பாகுபலி படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்தது. கடந்தாண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர்  படம் ரூ. 1200 கோடிக்கு மேல் வசூலித்தது. மேலும் ஆஸ்கர் விருதையும் அப்படம் வென்றது. உலக அரங்கில் இந்தியப் படங்கள் மற்றும் பாடல்கள் மீது ஆர்வம் பலருக்கும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையொல் ராஜமவுலியை மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ தனது விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. அதையொட்டி தயாரிக்கப்பட்டு வரும் விளம்பரப் படத்தில் ராஜமவுலி நடித்து வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

mahesh babu

ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து ராஜமவுலி மகேஷ் பாபுவுடன் இணைகிறார். அந்த படம் ஜேம்ஸ் பாண்டு கதையம்ச வடிவில் உருவாகவுள்ளது. இது சர்வதேச சந்தையில் போட்டிப்போடும் படமாக இருக்கும் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

From Around the web