ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! 

 
1

நடிகராக ஆசைப்படும் தந்தை, தனது ஆசை நிறைவேறாத பட்சத்தில் தன்னுடைய மகனுக்கு சிறுவயதில் இருந்தே நீ நடிகராக வேண்டும் என ஆசையை ஊட்டி வளர்க்கிறார். இதற்காக படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைகிறார் கவின். அதில் எப்படிப்பட்ட அவமானங்கள், கஷ்டங்களை சந்திக்கிறார் என்பதும் இறுதியில் அவ்வாறு நடிகராக மாறினார் என்பதையும் தந்தையும் கனவை நிறைவேற்றினாரா? அதற்கிடையில் காதல், செண்டிமெண்ட், எமோஷனல் என அனைத்தும் கலந்த கலவையாக காணப்பட்ட படம் தான் ஸ்டார்.

இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 நாட்களைக் கடந்த நிலையில், இதுவரையில் 15 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்திருந்தது. தற்போது வரையில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த படம் ஜூன் 14ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தை ஓடிடியில் பார்க்கத் தயாராக உள்ள பல ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

From Around the web