இதோட நிறுத்திக்கோ.. இனி என்னை பற்றி தப்பு தப்பா சொல்ல சொல்ல உன்னை பற்றி நான் சொல்லிக் கொண்டே இருப்பேன் - ஷகீலா பேட்டி!

 
11

சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகை ஷகீலா பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பயில்வான் ரங்கநாதனிடம் அவருடைய மகள் ஒரு லெஸ்பியன், இதை ஏன் அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று ஷகிலா கேட்டார். உடனே கோபத்தின் உச்சிக்கே சென்ற ரங்கநாதன், இப்படி பேச வேண்டாம் உங்கள் நாக்கு அழுகிவிடும், என்ற இந்த செய்தி இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.

இதையடுத்து, சர்ச்சையில் சிக்கிய அவரது மகளுக்கு வீட்டில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்தார். மாப்பிள்ளை என் மனைவியின் அண்ணன் மகன் ஐடியில் வேலை பார்க்கிறார். இருவரும் ஏற்கனவே காதலித்து வந்தார்கள், இந்த தகவலை என்னிடம் சொன்னதும் மைத்துனருடன் பேசி நிச்சயம் செய்துவிட்டேன் என்று பேசி இருந்தார். மேலும், மகளின் நிச்சய போட்டோவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஷகீலா அளித்துள்ள பேட்டியில், செய்தியாளர் பயில்வான் பிரேம்ஜி கல்யாணத்தை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஷகீலா, பிரேம்ஜிக்கு திருமணம் நடந்ததை சினிமா உலகில் இருப்பவர்கள் அனைவரும் கொண்டாடுகிறோம். அவரை அனைவரும் நம்ம வீட்டு குழந்தையாகத்தான் பார்க்கிறார்கள். அதைக்கூட விமர்சனம் செய்ய வேண்டுமா? 25 வயது வித்தியாசம் இருந்தா, பயில்வான் ரங்கநாதனுக்கு என்ன பிரச்சனை.

இவர் வீட்டில் அவரின் மகளுக்கு ஏன் இவ்வளவு அவசரமாக திருமண ஏற்பாட்டை செய்து நிச்சயம் செய்தார். பயில்வான் வீட்டில் நல்லது நடந்ததற்கு நான் தான் காரணம், நான் அவரின் மகள் பற்றி உண்மையை சொன்னதால் தான் அந்த பெண்ணுக்கு இவ்வளவு சீக்கிரம் நிச்சயம் செய்தார். வெளியில் இருந்து மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதானே, ஏன் சொந்தத்துக்குள்ளேயே பேசி ஒரு செட்டப் பண்ணி மைத்துனர் மகனுக்கு நிச்சயம் செய்து இருக்க, பயில்வான் உன் வேலை எல்லாம் எனக்கு தெரியும். நீ சரியான பைத்தியக்காரன்டா.

என்னை பற்றி தப்பு தப்பா,சொல்ல சொல்ல உன்னை பற்றி ஒவ்வொரு விஷயமாக நான் சொல்லிக்கொண்டு தான் இருப்பேன்.இதோட நிறுத்திக்கோ இனிமேல் என்னை பத்தி தப்பான பேசுன அவ்வளவுதான் என்ற ஷகிலா அந்த பேட்டியில் பயில்வானை வெளுத்து வாங்கி உள்ளார்.

 

From Around the web