தீபிகா படுகோனுடன் கைக்கோர்க்கும் சிம்பு..??
 

 
simbu
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்துக்கு தீபிகா படுகோனை கதாநாயகியாக நடிக்கவைக்க படக்குழு முயற்சித்து வருவதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
 

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் பெரியளவில் வெற்றி அடைந்தன. ஆனால் சமீபத்தில் வெளியான ‘பத்து தல’ படம் பெரியளவில் வெற்றி அடையவில்லை. எனினும் அவர் அடுத்து நடிக்கும் படம் மீதான எதிர்பார்ப்பு தற்போதே துவங்கியுள்ளது.

அதன்படி சிம்பு நடிக்கும் அவருடைய 48-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃப்லிம்ப்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

deepika padukone

இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு தீபிகா படுகோனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும், அவர் படத்தில் நடிப்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web