வலிமை பட ஃபர்ஸ்ட் லுக்- தேதி குறிச்சாச்சு..!

 
வலிமை பட அப்டேட்

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டுக்கான தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது.

சுமார் இரண்டாண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வரும் வலிமை படத்தின் ஒரே அப்டேட் கூட இதுவரை வெளிவரவில்லை. இன்னும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கான சிறப்பு அனுமதி கோரி படக்குழு காத்திருக்கிறது.

இதற்கிடையில் ரசிகர்கள் பலர் பல நாட்களாக, மாதங்களாக வலிமை அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூகவலைதளத்தை திறந்தாலே வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் பதிவிடும் போஸ்டுகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

முன்னதாக கடந்த மே மாதம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட இருந்தது. ஆனால் அப்போது கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் உச்சம் அடைந்தது. இதனால் போஸ்டர் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் வேறு ஏதேனும் பிரச்னை வருவதற்குள் வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி இம்மாத இறுதிக்குள் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

From Around the web