யூரோ கால்பந்து போட்டியிலும் எதிரொலித்த ‘வலிமை’ பட அப்டேட்..!

 
வலிமை அப்டேட்

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டுக்கு வேண்டி யூரோ கால்பந்து போட்டியில் கொதித்து எழுந்த சம்பவம் உலகளவில் வைரலாகி வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. சுமார் இரண்டாடுகளாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. கொரோனா காரணமாக படத்தின் தயாரிப்புப் பணிகள் தாமதமானாலும், இதுவரை படம் தொடர்பான ஒரு அப்டேட் கூட வெளிவரவில்லை.

இதனால் பல மாதங்களாக வலிமை படம் தொடர்பான தகவல்களை ரசிகர்கள் பல்வேறு தளங்களில் முன்வைத்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண வந்த ரசிகர்கள் சிலர் ‘வலிமை’ அப்டேட் கோரி பதாகையை தூக்கிப் பிடித்த சம்பவம் வெளியாகி வைரலானது.

அதை தொடர்ந்து ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ‘யூரோ கால்பந்து’ கோப்பையில் ‘வலிமை’அப்டேட் கேட்டு பிரமாண்ட பதாகையை ரசிகர்கள் காட்டினர். இது கேமரா கண்களில் பதிவு செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியானது.

யூரோ கால்பந்து போட்டியை காண வந்த ரசிகர்களில் வலிமை அப்டேட் கேட்டது பலரையும் ஆச்சரியம் அடையச் செய்துள்ளது. இந்நிலையில் பல மாத காத்திருப்புக்கு பிறகு வரும் ஜூலை 15-ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.

From Around the web