பொங்கலுக்கு ’வலிமை’ படம் ரிலீஸ்: போனி கபூர் அறிவிப்பு..!

 
வலிமை படம்

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் காலா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹியூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் பழம்பெரும் நடிகை சுமித்ரா, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட படப்பிடிப்புடன் வலிமை படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்தன.


இந்நிலையில் வலிமை படத்தின் முதல் பார்வை நாளை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள் நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது.

இது படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை எற்படுத்தியுள்ளது. ஆனால் அதே சமயத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படம் வலிமை படத்துக்கு முன்னரே வெளியாகி விடும் விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
 

From Around the web