ஓ.டி.டி-யில் ரிலீஸாகும் வலிமை..? உண்மை நிலவரம் இதுதான்..!

 
அஜித் குமார்

அஜித் நடித்துள்ள வலிமை படம் பிரபல ஓ.டி.டி தளத்தில் ரிலீஸாவது தொடர்பாக வெளியான தகவல் குறித்த பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் நடித்து வரும் படம் ‘வலிமை’. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

படத்தின் ஒரு போஸ்டர் கூட வெளியாகத நிலையில், கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்பு நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளால் படத்தின் உருவாக்க பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளன. மேலும், இதுதொடர்பாக படக்குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் எதுவும் தெரியவில்லை.

இந்நிலையில் வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகமல் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில் வலிமை படம் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்யப்படாது என்கிற தகவல் உறுதியாகியுள்ளது. ஓ.டி.டி தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல நிறுவனம் ஒன்று இதை உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வலிமை படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. விரைவில் இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web