தெலுங்கு, இந்தியில் வெளியாகும் ‘வலிமை’..!!
Nov 11, 2021, 06:35 IST
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படத்தைத் போனி கபூர் தயாரித்து வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ‘வலிமை’ படத்திலும் இதே கூட்டணி இணைந்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீஸர் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மீண்டும் அஜித் - போனி கபூர் - எச்.வினோத் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.
இந்நிலையில் ‘வலிமை’ படத்தை இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளுயிடுவதற்கான பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
படத்துக்கான இந்தி டப்பிங் பணிகளை தொடங்குமாறு போனி கபூர் படக்குழுவினரைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. படம் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)