அண்ணாத்த உடன் மோதும் வலிமை..!

 
ரஜினிகாந்த் மற்றும் அஜித்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் அண்ணாத்த படத்துன் இணைந்து தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து அண்ணாத்த மற்றும் வலிமை படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. வலிமை படம் சென்னையிலும், அண்ணாத்த படம் மேற்கு வங்காளம் மற்றும் சென்னையிலும் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படம், ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு முன்னதாகவே வெளியாகும் என எதிரபர்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவால் மூடப்பட்டுள்ள திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஒருவேளை திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்களா என்பது தெரியாது.

இதனால் தீபாவளியை கருத்தில் கொண்டு பெரிய நடிகர்கள் படங்கள் திரையரங்குகளுக்கு வந்தால், ரசிகர்களும் படம் பார்க்க வருவார்கள் என பலரும் கருதுகின்றனர். அதன்பொருட்டு வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை மாஸ்டர் திரைப்படம் திரையரங்குக்கு ரசிகர்களை கூட்டி வந்தது. இம்முறை வலிமை மற்றும் அண்ணாத்த படங்கள் அதை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web