வலிமை அப்டேட் மிஸ்ஸானாலும்... மிஸ்ஸாகாத ’தல’ அஜித் பிறந்தநாள்..!

 
வலிமை அப்டேட் மிஸ்ஸானாலும்... மிஸ்ஸாகாத ’தல’ அஜித் பிறந்தநாள்..!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் இணையதளங்களில் நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைகட்டியுள்ளது. 

தமிழ் சினிமாவில் ‘தல’-ஆக இருக்கும் நடிகர் அஜித்துக்கு இன்று 50-வது பிறந்தநாள். உழைப்பாளர் தினத்தில் பிறந்து, உழைப்பினால் முன்னுக்கு வந்து திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர் தான் நடிகர் அஜித். 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இணையதளங்களோடு நிறுத்தப்பட்டுவிட்டன. கடந்தாண்டும் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை. 

எனினும், இந்தாண்டு அவர் பிறந்தநாளுக்கு நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமையை கருத்தில் கொண்டு படத்தின் போஸ்டர் இன்று வெளியாகாது என்று முன்னரே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.

இதனால் கடைசி நேரத்தில் வலிமை அப்டேட் எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் அதை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த வலிமை படத்திற்கு மீதி 10 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டியுள்ளது. ரஷ்யா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் காட்சிகள் படமாக்கப்பட இருந்தன. ஆனால் அதற்குள் கொரோனாவின் கோர தாண்டவத்தால் அது நடைபெற முடியாமல் போனது.

மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பிறகு மீதமுள்ள காட்சிகள் படமாக்கிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஓ.டி.டியில் நேரடியாகவும் இந்த படம் வெளியிடப்படக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.  
 

From Around the web