கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை..?

 
1

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டும் கால்ஷீட் வழங்காத நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Vijay-Sethupathi

இதில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா மற்றும் யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுத்து இருக்கின்றனர். இதில் சில நடிகர்களுக்கு நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு சொல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று அந்த நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த பேச்சு வார்த்தையானது சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்று வருகிறது. 

Dhanush

தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படவுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web