”போட்றா வெடிய” பத்து தல ஆடியோ, டிரெய்லர் ரிலீஸ்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பத்து தல’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார் என்றாலும், நடிகர் சிம்பு அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
 
pathu thala simbu

கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மஃப்டி’. ஸ்ரீ முரளி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார். தற்போது இந்த படம் தான் தமிழில் ‘பத்து தல’ என்கிற பெயரில் தயாராகியுள்ளது.

gautam karthik

’சில்லுனு ஒரு காதல்’, ’நெடுஞ்சாலை’, ‘ஹிப்பி’ படங்கள் மூலம் கவனமீர்த்த கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர், அனு சித்தாரா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பத்து தல’ படம் வரும் 30-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

priya bhavani shankar

அதன்படி ‘பத்து தல’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வரும் 18-ம் தேதி மாலை 5 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


இது படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, பத்து தல படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பத்து தல டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் எழுந்துள்ளது. 

From Around the web