ட்ரெண்டிங் ஆகும் மாநாடு படத்தின் அசத்தலான புதிய ட்ரைலர்..!!
Nov 19, 2021, 18:17 IST
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’.சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் மாநாடு படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தற்போது மாநாடு படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகியுள்ளது.ஸ்பெஷல் ட்ரைலராக இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது.
 - cini express.jpg)