டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இருந்து 23 ஹாலிவுட் சீரியல்கள் நீக்கம்- என்ன ஆச்சு..??

ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்திலிருந்து ‘தி லாஸ்ட் ஆஃப் அஸ்’, ’சக்ஸஷன்’, தி சோப்ரான்ஸ், வீப், கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட 23 வெப் சிரீஸுகள் அகற்றப்பட்டுள்ளதால், இந்திய பார்வையாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
 
HBO

இந்திய பார்வையாளர்களுக்கு பெரும் அடியாக ஹாட் ஸ்டாரின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் தி லாஸ்ட் ஆஃப் அஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை காணும் ரசிகர்கள் மிகவும் ஏமாந்து போயுள்ளனர். அந்த சிரீஸுகள் இனி இந்தியாவில் ஹாட் ஸ்டார் தளம் வழியாக பார்க்க முடியாது என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக, 2020-ம் ஆண்டு இந்தியாவில் எச்.பி.ஓ சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அதனால் இந்தியாவில் தனது படைப்புகளை ஸ்ட்ரீம் செய்ய ஹாட்ஸ்டாருடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில் பொருளாதார மந்தநிலை காரணமாக ஹாட்ஸ்டார் நிறுவனம் செலவுக் குறைப்பு  மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனால் எச்.பி. ஓ நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவது குறித்து ஹாட்ஸ்டார் அந்நிறுவனத்திடம் முத்தரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹாட்ஸ்டாருடைய லாபத்தில் பலத்த அடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் HBO உள்ளடக்கத்தின் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பிடிக்க வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும். விரைவில் எச்.பி.ஒ நிறுவனம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web