நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா ? ஆச்சிரியத்தில் ரசிகர்கள் ..!!
Nov 16, 2021, 11:29 IST

1990களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றார். இவரின் நடனத்திற்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. புகழின் உச்சியில் இருந்த போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார். அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தீவிரமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை சிம்ரன்.
இந்நிலையில் தற்போது சிம்ரனின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், என்னது சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேட்டு வாயடைத்து உள்ளனர்.