குக் வித் கோமாளி சீசன் 3-ல் சுசித்ரா..? அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா..??

 
குக் வித் கோமாளி சீசன் 3-ல் சுசித்ரா..? அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா..??

சமூகவலைதளங்களில் குக் வித் கோமாளி சீசன் 2-ல் பாடகி சுசித்ரா கலந்துகொள்ளப் போவதாக வெளியாகி வரும் தகவல் குறித்து அவரே மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி. அதனுடைய இரண்டாவது சீசன் வரும் ஏப்ரல் 14-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்தாண்டு சீசனுக்குரிய வெற்றியாளரை அறிந்துகொள்ள பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 பற்றிய செய்திகள் ஊடகங்கள் வெளிவர தொடங்கிவிட்டன. முதல் இரண்டு சீசனுக்கும் கிடைத்த வரவேற்பால், உடனடியாக புதிய சீசனை தொடங்குவதற்கு தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்துகொள்ள நிகழ்ச்சிக் குழு பிக்பாஸ் சுச்சியை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. பாடகி சுசித்ரா ஏற்கனவே சமையல் குறித்த யூ-ட்யூப் சேனல் ஒன்றை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் சீசன்- 3ல் பங்கேற்பது உறுதி என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு ரசிகர் சமூகவலைதள பக்கத்தில் சுசித்ரா லைவ் வந்தபோது அவரை டேக் செய்து நீங்கள் குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொள்ள வேண்டும்.. உங்களை விடுவதாக இல்லை என கூறியுள்ளார். அதற்கு நேரலையில் பதிலளித்த அவர், அப்படியொரு எண்ணம் இருந்தால் என்னை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

இதனால் அவர் குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தெரிகிறது. முன்னதாக பிக்பாஸ் சீசன் 4-ல் அவர் கலந்துகொள்வார் என்று செய்திகள் வெளியான நிலையில், அதற்கு சுசித்ரா மறுப்பு தெரிவித்து பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web