பிட்டுப் பட கலாச்சாரத்தை தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்ததே பயில்வான் தான் - சுசித்ரா..!

 
1

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் பாடகியாக ஜொலித்தவர் பாடகி சுசித்ரா.இவர், யாராடி மோகின படத்தில் நடித்த நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 


சுசி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு, சுசித்ரா எங்கே இருக்கிறார், என்ன ஆனார் என்றே தெரியவில்லை, வெளி உலகத்திற்கு தலைகாட்டாமல் இருந்த சுசித்ரா, திடீரென யூடியூப் சேனல் ஒன்றுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அதில், தனுஷ், கார்த்திக் குமார், திரிஷா, ஆண்ட்ரியா, பயில்வான் ரங்கநாதன் என பலரையும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். மேலும், சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கு எனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. இது தனுஷ் மற்றும் கார்த்திக்குமார் சேர்ந்து செய்த வேலை. இதில் நான் பலிகாடாகிவிட்டேன் என்றார்.


திருமணத்திற்கு பிறகும் டேட்டிங்: முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் தனியாக அறையில் இருந்தார்கள் என்றும், எனது கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்றும், பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருந்தார். மேலும், போதை பொருள் உபயாேகிக்கும் பழக்கமும் தனுஷிற்கு இருப்பதாக தெரிவித்தது மட்டுமில்லாமல், தனுஷ்-ஐஸ்வர்யா இருவருமே திருமண உறவில் இருந்த போதே வெவ்வேறு நபர்களுடன் டேட்டிங் சென்று இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ஒரு நல்ல தாயே இல்லை, அந்த வகையில் தனுஷ் தான் பாவம் என்றார்.

அதோடு விடாமல், பயில்வானை சகட்டு மேனிக்கு வசைபாடி இருந்தார். சுச்சி லீக்ஸ் விவகாரத்தின் போது இணையத்தில் பலர் பரபரப்பாக பேசினார்கள். ஆனால், அதன் பிறகு அனைவரும் அது பற்றி பேசவே இல்லை. ஆனால், இந்த பயில்வான் ரங்கநாதன் மட்டும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுச்சி லீக்ஸ் சுசித்ரானு பேசிக்கிட்டு இருக்காரு, தனுஷ் மற்றும் கார்த்திக் பணம் கொடுத்து என்னைபற்றி பேச சொல்லுறாங்களா? தனுஷை பற்றி தப்பா பேசுங்க என்று ரஜினி காசு கொடுத்தா, தனுஷ் பற்றியும் தப்பா பேசுவார்.

இருபது வருஷமா பாடகியாக இருந்து இருக்கிதறேன். இதுவரை நான் ஒரு முறைக்கூட பயில்வானை சந்தித்தது இல்லை. அவருக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை, ஆனாலும் அவர் என்னைப்பற்றிதான் பேசுகிறார். அவர் ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அனுப்பும் செய்து கொடுக்கும் ஏஜெண்டாக இருந்தார்.இந்த விஷயம் தனக்கு நன்றாகத் தெரியும். அந்த காலகட்டத்தில் கேரளாவில் மட்டுமே இருந்த பிட்டுப் பட கலாச்சாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்து பாலம் போட்டுக்கொடுத்ததே பயில்வான் தான். அதுமட்டுமில்லாமல், பயில்வான் ஒரு பத்திரிக்கையாளரே இல்லை என்று ஒரே பேட்டியில் மொத்த நடிகர்களையும் டார் டாராக கிழித்துவிட்டார்

From Around the web