இனி எந்த யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன் - சுசித்ரா..! 

 
1

கடந்த ஒரு சில நாட்களாகவே பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா, அனிருத், பயில்வானன், த்ரிஷா மட்டுமின்றி அவருடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமார் பற்றியும்  விஜய், அஜித், ஷாருக்கான் என பிரபல நட்சத்திரங்களையும் சீண்டி உள்ளார்.

இந்த நிலையில், தற்போது சுசித்ரா இனி எந்த youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன். அவர்கள் எனது பர்சனல் வாழ்க்கையை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்கள். தாறுமாறாக விமர்சிக்கின்றார்கள் என்று நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதன்படி அவர் கூறுகையில், அநேகமான youtube சேனல்கள் எனது பர்சனல் விஷயத்தை பற்றி பேசுவதற்கு ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்கு வியூஸ் வருது, காசு வருது இதனால் தம்லைன்ல கண்டபடி போடுறாங்க. சுசித்ரா ரேப் தனுஷ், சுசித்ரா ரேப்  அனிருத் என்று போட்டு, அதற்கு ஒரு காரணத்தையும் சொல்றாங்க. இதனால் நான் இனி பேட்டி கொடுப்பதாக இருந்தால் டிவி சேனலுக்கு மட்டும் தான் கொடுப்பேன். எந்த youtube சேனலுக்கும் கொடுக்க மாட்டேன்.

மேலும் பயிர்வானனுக்கும் எனக்கும் நடக்கும் சண்டையை நீங்க பார்த்து ரசித்து இருக்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் அவர் என் முகத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். அதாவது 50 வயதான பெண்ணுக்கு இப்படித்தான் முகம் இருக்கும் என்று குறியுளளார்.

இனி எனது சேனலில் தனுஷ் பற்றியோ கார்த்திக் குமார், பயில்வாணன் பற்றியோ இருக்காது. திரைப்பட விமர்சனத்தை பற்றி பேசலாம். ஏனைய சேனல்கள் என்னை பற்றி பேசினால் அதற்கு போய் சண்டை போட்டுக் கொண்டிருக்காதீர்கள். மேலும் உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் எனது சேனலை விட்டுப் போய்விடாதீர்கள் என்று ரசிகர்களிடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

From Around the web