முன்னாள் கதாநாயகி கனகாவுக்கு 48 வயதில் வந்த திடீர் ஆசை..!

 
கனகா
தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக இருந்த கனகா தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான படம் கரகாட்டகாரன். மிகப்பெரியளவில் ஹிட்டடித்த இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கனகா. அதை தொடர்ந்து பல்வேறு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்தார்.

சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியதை அடுத்து சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகை விட்டு விலகிய அவர், சென்னையிலுள்ள தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வருகிறது.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு ஒப்பனை, காஸ்டியூம், எப்படி பேச வேண்டும் என பல விஷயங்களிலும் இன்றைக்கு இருப்பது போல் கற்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நடிகை கனகா சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள இந்த திடீர் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

From Around the web