வலிமை படக்குழுவுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..!

 
வலிமை படக்குழுவுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ள நிலையில் படக்குழுவினர் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கி வரும் படம் ‘வலிமை’. சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார், ’காலா’ படத்தின் நடித்த ஹூயுமே குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக கார்த்திகேயா என்பவர் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில், ஒரேயொரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதை ஐரோப்ப நாடுகளில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த பணிகள் தாமதமடைந்துள்ளன.

உலகளவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டு படக்குழுவினருக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் மீதமிருக்கும் படப்பிடிப்பை இந்தியாவிலே நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. 
 

From Around the web