புனித் ராஜ்குமார் இழப்பால் தொடரும் தற்கொலை: சிவராஜ்குமார் வேண்டுகோள்

 
புனித் ராஜ்குமார்

மறைந்த புனித் ராஜ்குமார் ரசிகர்கள் யாரும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என அவருடைய அண்ணன் சிவராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று கன்னட நடிகர் ராஜ்குமார் தனது 46 வயதில் மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மரணம் ரசிகர்களை மிகவும் கலக்கமடையச் செய்துள்ளது. புனித்தின் இழப்பை தாங்க முடியாத ரசிகர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதுதொடர்பாக புனித் ராஜ்குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். எங்களுக்கு அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வேதனை நிரந்தரமாக இருக்கும். ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையை முன்னெடுத்து வாழ வேண்டும். நடந்த விஷயங்களை மறந்து பயணிக்க வேண்டியது கட்டாயம் என்று சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிர்ச்சியை அடைந்தேன். புனித் ராஜ்குமார் இதை ஒருபோதும் விரும்ப மாட்டார். அன்பு இருக்க வேண்டும். அதற்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது. தங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும். குடும்பத்தை கவனித்து கொள்வது முக்கியம் என்று சிவராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

From Around the web