பால் பண்ணை தொடங்கிய சன் டிவி பிரபலம்..!
Oct 18, 2023, 06:05 IST
ரஜினி, விஜய் முதல் தமன்னா, சமந்தா, நயன்தாரா என எல்லோரும் சொந்த தொழில் செய்கிறார்கள்.அப்படி சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகை பால் பண்ணை வைத்துள்ளார். விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.
அதன்பிறகு ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்தவர் இப்போது சன் தொலைக்காட்சியில் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் TRPயில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர்.
சீரியல்களில் பிஸியாக நடித்துவரும் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது சொந்தமாக பால் பண்ணை வைத்துள்ளார். ஒரு மாட்டில் இருந்து பால் கறக்கும் வீடியோவை அவரே வெளியிட்டு 50 மாடுகள் வைக்க வேண்டும் என்பது ஆசை, இப்போது தொடங்கியுள்ளேன் என பதிவு செய்துள்ளார்.