சன் டிவி சீரியல் நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்..! வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகிறாராம்..! 
 

 
1

‘இதயத்தைத் திருடாதே’ என்னும் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஹேமா பிந்து. இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ தொடரில் நடித்து வருகிறார்.

பொதுவாக சில நடிகர்கள் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து விட்டு பிறகு அங்கு வாய்ப்புகள் குறைந்த பிறகு சீரியலை நோக்கி படையெடுத்து வருவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளி திரையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பல நடிகைகளை சொல்லலாம். குறிப்பாக நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் என பல நடிகைகள் இருக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது சன் டிவியில் இலக்கியா சீரியலில் நடிக்கும் நடிகை ஹேமா பிந்துவும் அடி எடுத்து வைத்திருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அதுபோல இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத வயதில் இவர் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறு வயது குழந்தையாக நடித்திருக்கிறார்.

Hima Bindu

இந்த நிலையில் நடிகர் கவுண்டமணி பல வருடம் கழித்து ஹீரோவாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

தற்போது இந்த திரைப்படத்திற்கான பட பூஜையில் ஹேமா கலந்து கொண்ட புகைப்படங்களும், அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவுகளும் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதோடு அந்த திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகி என்று தெரிய வந்திருக்கிறது. இதற்கு அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக ஹேமா பிந்துவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

From Around the web