கங்குவா படத்தில் நடித்த சன் டிவி சீரியல் பட நடிகை..! யாரு தெரியுமா ?
கங்குவா திரைப்படம் தற்போது நல்ல வசூல் பெற்று வருகிறது. கலவையான விமர்சனம் வந்த போதும் திரையரங்கிள் மக்கள் கூட்டம் பெரிதாக காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் சன் டிவியில் மாபெரும் வெற்றியடைந்த சீரியலில் ஒன்று எதிர்நீச்சல்.
இதற்க்கு ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலின் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்நீச்சல் சீரியலில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஹேமா தயாள். இவர் கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். சூர்யாவுடன் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.