மீண்டும் சன் டிவி சீரியல் தான் டாப்..! அப்போ சிறகடிக்க ஆசை..?
டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்வதற்காக வாராவாரம் புதிய யுத்திகளை தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் புதிய யுத்திகளை கையாண்டு வருகின்றன. சமீப காலமாகவே சன் டிவி சீரியல்கள் பின்வாங்கிய நிலையில் விஜய் டிவி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் முதலாவது இடத்தை தக்க வைத்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் சன் டிவி சீரியலான சிங்க பெண்ணே சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சன் டிவியின் சீரியலான கயல் சீரியல் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்தையும் சன் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் பெற்றுள்ளது. நான்காவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்திலும் சன் டிவி சீரியல் ஆன சுந்தரி சீரியலும், ஆறாவது இடத்தில் மல்லி சீரியலும் காணப்படுகின்றன.
கடந்த சில வாரங்களாகவே முதலிடத்தில் இருந்து வந்த விஜய் டிவி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் பெரிய சரிவை சந்தித்து தற்போது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், ஒன்பதாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியல் காணப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சன் டிவி சீரியல் அந்த இடத்தை பெற்றுள்ளது.
இதேவேளை, சிறகடிக்க ஆசை சீரியலில் ரகசியங்கள் ரகசியங்களாகவே இருப்பது ரசிகர்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.