விட்ட இடத்தை தட்டித் தூக்கிய சன் டிவி சீரியல்கள்..!
2024 ஆம் ஆண்டின் 34 வது வாரத்தில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியில்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வாரம், சன் டிவி, விஜய் இந்த சீரியல்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
கடந்த வாரம் மூன்றாம் இடத்தைப் பிடித்த ‘கயல்’ சீரியல் இந்த வாரம் 8.91 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த ‘சிங்க பெண்ணே’ சீரியல் இந்த வாரம் 8.77 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் துவங்கப்பட்ட ‘மூன்று முடிச்சு’ சீரியல் 8.16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.‘மருமகள்’ 8.02 புள்ளிகளுடன் டிஆர்பி யில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’, இந்த வாரம் 7.95 புள்ளிகளுடன் ஐந்தாவது இந்த தள்ளப்பட்டுள்ளது.