டி.ஆர்.பி ரேட்டிங்கில் குக் வித் கோமாளியை பந்தாடிய சன் டி.வி சீரியல்கள்..!

 
டி.ஆர்.பி ரேட்டிங்கில் குக் வித் கோமாளியை பந்தாடிய சன் டி.வி சீரியல்கள்..!

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தை பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனித்தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் சீரியலுக்கே முன்னுரிமை கிடைக்கும். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிப்பரப்பானதை தொடர்ந்து இந்த நிலை மாறியதாக கருதப்பட்டது. ஆனால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே போட்டி கடுமையாக உள்ளது. இந்தாண்டுக்கான தமிழ் புத்தாண்டு பண்டிகையின் போது இரண்டு தொலைக்காட்சிகளும் போட்டிப்போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கின. விஜய் நடித்த மாஸ்டர் படம் சன் டிவியில் ஒளிப்பரப்பானது. விஜய் டிவியின் அன்றைய நாள் முழுக்க குக் வித் கோமாளி சீசன் 2 ஒளிப்பரப்பானது.

இதற்கான டி.ஆர்.பி ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ் புத்தாண்டு தினத்தின் சன் டிவி-யில் ஒளிப்பரப்பான மாஸ்டர் படம் டாப் ரேட்டிங்கில் உள்ளது. அதை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் சிங்கம் 3 படமும், மூன்றாவது இடத்தில் ரோஜா சீரியல் இடம்பிடித்துள்ளது. மிகுந்த பொருட்செலவில் உருவான குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிச்சுற்று பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆனால் நான்காம் இடத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் உள்ளது. சில வாரங்கள் முன்பு வரை டாப் ரேட்டிங்கில் இருந்த இந்த சீரியலை, கடந்த வாரம் சன் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியல் முந்துவிட்டது. அதன்படி டி.ஆர்.பி ரேட்டிங்கில் பல ஆண்டுகளாக சன் டிவி தான் முதன்மையாக இடத்தில் இருந்து வருகிறது. அதேநிலை தற்போதும் தொடர்ந்து வருகிறது. 


 

From Around the web