சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சன் டிவி..!! 

 
1

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘டாக்டர்’. இதில் பிரியங்கா அருள் மோகன், வினய், அர்ச்சனா, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்ததுள்ளது. அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘டாக்டர்’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை புரிந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தப் படத்தை தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு சன் டிவி ஒளிபரப்பவுள்ளது. நவம்பர் 4-ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும் படம், உடனடியாக ஒளிபரப்பாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இது தொடர்பான விளம்பரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

நவம்பர் 4-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பைத் தொடர்ந்து, நவம்பர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது ‘டாக்டர்’. இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

From Around the web