ரெஜினா டிரெய்லர் எப்படி இருக்கு..??

சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள ‘ரெஜினா’ படத்தின் டிரெய்லர் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை மையப்படுத்திய ஆக்‌ஷன் த்ரில்லராக இந்த படம் தயாராகியுள்ளது.
 
sunanina

நடிகை சுனைனா தற்போது செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவரை கதையின் நாயகியாக காட்டி எடுக்கப்பட்டுள்ள படம் ரெஜினா. இந்த படத்தை மலையாள சினிமாவைச் சேர்ந்த டொமின் டி சில்வா என்பவர் இயக்கியுள்ளார்.

சுனைனாவுடன் நீபா ஆதிதன், ரிது மந்த்ரா, தீனா. விவேக் உள்ளிட்ட பலரும் அடித்துள்ளனர். அதிரடியான மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற காட்சிகள் படத்தின் டிரெய்லரிலே இருப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் இந்த டிரெய்லர் ஓடிக்கொண்டிருக்கும் போதே, பின்னணியில் ஒரு குரல் கதையை விவரிக்கிறது. காட்டில் இருக்கும் சிங்கம் தனக்கு வேண்டிய உணவினை குகைக்குள் வைத்துகொண்டது. இதனால் மற்ற விலங்குகளுக்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் அவை எல்லாம் ஒன்று சேர்ந்து சிங்கத்தின் குகைக்கு தீ வைத்துவிடுகின்றன. எப்படிப்பட்ட சிங்கமாக இருந்தாலும், வெளியில் வந்துதானே ஆக வேண்டும் என்பதுடன் டிரெய்லர் முடிந்துவிடுகிறது. 


 

From Around the web