மீண்டும் இணைந்த சுந்தர்.சி - வடிவேலு காம்போ..! வெளியான அசத்தல் ட்ரைலர்..!   

 
1

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பெயர் "கேங்கர்ஸ்" இதில் வடிவேலுவுடன் சுந்தர்.சி, கேத்ரின் தெரசா, வாணி போஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தில் வடிவேலு லேடி கெட்டப்பில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி உள்ளது. "கேங்கர்ஸ்" படம் ஏப்ரல் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பினை பெற்றுள்ளதுடன் வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் அதிகபட்ஷ பார்வையாளர்களை பெற்றுள்ளது.

From Around the web