100 கோடி வசூலை அள்ளிய இந்த ஆண்டின் முதல் படம் - சுந்தர்.சி பெருமிதம்..!
சுந்தர் சி இயக்கிய நடித்த ’அரண்மனை 4’என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளதை அடுத்து, சுந்தர் சி மாஸ் நடிகர்கள் பட்டியல் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரைப்பட துறைக்கு இந்த ஆண்டு பெரிய வெற்றிகள் இல்லாத சோதனையான ஆண்டாகவே இதுவரை இருந்து வந்தது. ’கேப்டன் மில்லர்’ ’அயலான்’ ’லால் சலாம்’ ’மெர்ரி கிறிஸ்மஸ்’, ‘சைரன்’ ’மிஷின் சாப்டர் ஒன்’ போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ’அரண்மனை 4’ திரைப்படம் மே மூன்றாம் தேதி வெளியான நிலையில் ஐந்தே நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது மூன்று வாரங்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ’அரண்மனை 4’திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த போஸ்டரும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
எனவே 2024 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் ஹிட் படமாக ’அரண்மனை 4’கருதப்படும் நிலையில் சுந்தர் சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதனையடுத்து அவர் ‘அரண்மனை’ படத்தின் ஐந்தாம் பாகத்தையும் இயக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.