சுந்தரா டிராவல்ஸ் நடிகை அடித்ததில் மருத்துவமனையில் அட்மிட் ஆன ஃபைனான்சியர்..!

 
1

’சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி அடிக்கடி காவல்துறையை வாசல் மிதித்தவர் என்பதும் கடந்த மார்ச் மாதம் கூட ஒரு இளைஞனை அடித்ததாக அவருடைய தந்தை இவர் மீது புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பைனான்சியர் ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவரை நடிகை ராதா அடித்ததாகவும் இதில் படுகாயம் அடைந்த அந்த பைனான்சியர் வடபழனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த பைனான்சியரின் பெயர் முரளி என்றும் அவர் நடிகை ராதாவுக்கு பணம் கொடுத்திருப்பதாகவும் அந்த பணத்தை கேட்க போனபோதுதான் பிரச்சனை வந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை ராதா குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web