மீண்டும் ‘சங்கமித்ரா‘ படத்தை கையில் எடுக்கும் சுந்தர்.சி ..?

சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘சங்கமித்ரா‘ பட அறிவிப்பை வெளியிட்டனர். மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தபட போஸ்டரை வெளியிட்டு அமர்க்களம் செய்தனர். இயக்குனர் சுந்தர் சி இந்தப்படத்தை சரித்திர கதையில் உருவாக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் பொருளாதார பிரச்சனையால் இந்த படம் அப்போது டிராப் ஆனது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்துள்ளதாக தொடர்ச்சியாக செய்திகள் வந்த நிலையில் உள்ளது. ஆனால் படத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஹீரோவாக நடிக்க இருந்த ஜெயம் ரவி விலகிவிட்டார் என்றும், அவருக்கு பதில் விஷால் நடிப்பதாக செய்திகள் வந்தன. இதேபோல் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அவருக்கு கணிசமான தொகையை சம்பளமாக தரவும் பேசி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.