தமிழில் ஹீரோயினாக களமிறங்கும் சன்னி லியோன்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
தமிழில் ஹீரோயினாக களமிறங்கும் சன்னி லியோன்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

பாலிவுட் நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கும் படத்தை ‘சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்குவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் ரீதியில் பாராட்டுக்களை குவித்த படம் ‘சிந்தனை செய்’. இந்த படத்தை யுவன் என்பவர் இயக்கி இருந்தார். குறிப்பாக இந்த படத்தின் படப் பாடல்கள் நல்ல வரவேற்பு கிடைத்தன. 

அதை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்ற அவர் ரணம், கதர்நாக் போன்ற ஹிட் படங்களுக்கு திரைகதை எழுதினார். இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது அவர் மீண்டும் தமிழுக்கு திரும்புகிறார்.

தமிழில் ஹாரர் - காமெடி கலந்த படமாக தயாராகும் இந்த படத்தை யுவன் தானே எழுதி இயக்கவுள்ளார். இதில் நாயகியாக பாலிவுட் நடிகை சன்னி லியோ நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழில் வடகறி படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது மீண்டும் அவர் தமிழில் நடிக்கவுள்ளது தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 
 

From Around the web