சன்னி லியோன் வசிக்கும் இடத்தில் ரூ. 31 கோடிக்கு வீடு வாங்கிய அமிதாப் பச்சன்..!

 
அமிதாப் பச்சன்

பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரும், இந்திய திரைத்துறையின் உச்சநட்சத்திரமாக விளங்கும் நடிகர் அமிதா பச்சன் ரூ. 31 கோடி செலவில் பிரமாண்டமான ஆடம்பர வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஏற்கனவே மும்பை ஜூஹூ பகுதியில் ஒரு பங்களா உள்ளது. இதற்கு பெயர் ஜல்சா பங்களாவாகும். இங்கு தனது மனைவி ஜெயா பச்சன், மகள் ஸ்வேதா நந்தா பச்சன், மகன் அமிதா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக அவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பை நகரத்தின் மிக முக்கிய இடமாக விளங்கும் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் புதியதாக அவர் வீடு வாங்கியுள்ளார். இது ஒரு அடுக்கமாகும். ’தி அட்லாண்டிஸ்; என்ற பெயர்கொண்ட இந்த கட்டிடத்தில் 34 வீடுகள் உள்ளன. அமிதாப் பச்சன் வாங்கியுள்ள வீட்டின் பரப்பளவு 5,704 சதுரடி. மேலும் இவருடைய வீடு இரண்டடுக்கு ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது. 

பல்வேறு ஆடம்பர வசதிகளை கொண்ட இந்த வீட்டில் 6 வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். அதற்காக பிரத்யேகமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அமிதாப் பச்சன் வாங்கியுள்ள இதே அடுக்குமாடி கட்டிடத்தில் நடிகை சன்னி லியோன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் அமிதாப் பச்சனுக்கு மும்பையில் ஏற்கனவே 5 வீடுகள் உள்ளன. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருடைய பெயரில் உள்ளன. புதியதாக வாங்கியுள்ள இந்த அட்லாண்டிஸ் வீடு யாருக்கு அவர் வாங்கினார் என்பது தெரியவில்லை. 
 

From Around the web