தன்னை ஒருவன் திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி விட்டான் - சன்னி லியோன் கண்ணீர் பேட்டி..!
பாலிவுட் திரையுலகில் ’நாகினி’ உள்பட தொலைக்காட்சி சீரியல்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சன்னி லியோன், அதன்பின் பாலிவுட் திரையுலகில் கால் பதித்து பல படங்களில் நடித்து வருகிறார், சில படங்களுக்கு நடனம் ஆடுவது துணை நடிகையாக நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் சில படங்களில் நடித்து வரும் சன்னிலியோனுக்கு தற்போது கைவசம் அரை டஜன் படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சன்னி லியோன் பேட்டி அளித்த போது 15 வயதில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஒருவன் ஏமாற்றி விட்டான் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், அவரும் என்னை காதலித்தார், இருவருக்கும் பிடித்திருந்ததால் திருமணம் செய்ய முடிவு செய்தோம், நிச்சயதார்த்தமும் நடந்தது, அதன் பிறகு திடீரென திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னை ஏமாற்றி விட்டான், அது எனக்கு மிகவும் வேதனையாகவும் வலி நிறைந்ததாகவும் இருந்தது, என் இதயமே நொறுங்கிப் போன அந்த நேரத்தில் என்னை கடவுள்தான் காப்பாற்றினார் என்று கூறினார்.
அதன் பிறகு கடவுள் தான் என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார் என்றும் தற்போதைய கணவரையும் கடவுள் தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் என்றும் தெரிவித்தார். டேனியல் வெபரை திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் என் வாழ்க்கையே சந்தோஷமாக மாறிவிட்டது என்றும் அவருக்கு என்றும் நான் கடமைப்பட்டிருப்பேன் என்றும் அவர் நெகிழ்ச்சியாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.