விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது சன்னி லியோன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி..!

 
1

விரைவில் டேட்டிங் நிகழ்ச்சி ஒன்றில் சன்னி லியோன் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் சன்னி லியோன் இந்த முறை ஸ்ப்லிட்ஸ்வில்லா x5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை அர்ஜூன் பிஜ்லானி, நிகில் சின்னப்பா மற்றும் ரன்விஜய் சிங் ஆகியோர் இணை தொகுப்பாளராக இருந்துள்ளனர்.

மற்ற நிகழ்ச்சிகளை போன்றில்லாமல் சன்னி லியோன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் அவர் போட்டியாளர்களிடம் அன்பு காட்டுவது, நண்பரை போன்று உபசரிப்பது உள்ளிட்டவைகளால் பெயர் பெற்றுள்ளார். அவர் தனது தொகுப்பாளர் பணியில் உண்மையாக இருப்பதாகவும், தொழில் அதிக சிறப்பாக இருந்துள்ளார் என்றும் இணை தொகுப்பாளரான நிகில் சின்னப்பா தெரிவித்துள்ளார்.

சன்னி லியோன் தொகுத்து வழங்கும் ஸ்ப்லிட்ஸ்வில்லா x5 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதையொட்டி இந்த நிகழ்ச்சிக்கான விளம்பர பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

From Around the web