சூப்பர் டீலக்ஸ் அஸ்வந்துக்கு கிடைத்த பதவி உயர்வு..!

 
அஸ்வந்த் அசோக்குமார்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு மகனாக நடித்து கவனமீர்த்த அஸ்வந்த் அசோக் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ள புதிய பதிவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஃபகத் பாசில், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஓடிடியில் வெளியான இந்த படம் உலகளவிலுள்ள திரை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.சூப்பர் டீலக்ஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ராசுகுட்டி என்கிற கதாபாத்திரத்தில் அஸ்வந்த் அசோக்குமார் என்கிற சிறுவன் நடித்தார். இவருடைய நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் ஜகமே தந்திரம் படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் சிறுவன் அஸ்வந்துக்கு தம்பி பாப்பா பிறந்துள்ளான். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் அஸ்வந்துக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

From Around the web