வரும் 15ம் தேதி ரிலீசாகும் சூப்பர் ஹிட் படங்கள்! என்னென்ன தெரியுமா? 

 
1

ஆகஸ்ட் 15 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படங்களை தற்போது காணலாம்.

1. தங்கலான்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 15-ம் தேதி(சுதந்திர தினம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2. வேதா

நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேதா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ஜான் ஆபிரகாம், ஷர்வாரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 15-ம் தேதி(சுதந்திர தினம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

3. ஸ்ட்ரீ 2

ராஜ்குமார் ராவ் , ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஸ்ட்ரீ 2'. இப்படம் வரும் 15-ம் தேதி(சுதந்திர தினம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

4. ரகு தாத்தா

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரகு தாத்தா'. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 15-ம் தேதி(சுதந்திர தினம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது

5. கேல் கேல் மெய்ன்

முதாசர் அஜீஸ் தற்போது இயக்கியுள்ள படம் 'கேல் கேல் மெய்ன்'. இந்த படத்தில் அக்சய் குமார், வாணி கபூர், பர்தீன் கான், டாப்ஸி பன்னு, அபர்சக்தி குரானா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 15-ம் தேதி(சுதந்திர தினம்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

From Around the web