விரைவில் திருமணம்- ’சூப்பர் சிங்கர்’ மாளவிகா அறிவிப்பு..!
 

 
வருங்கால கணவருடன் மாளவிகா

தேசியளவில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பிரபலமான பாடகி மாளவிகா தன்னுடைய திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆரம்ப சீசனில் பங்கெடுத்தவர் மாளவிகா. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் தோல்வியை தழுவினார். எனினும் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சிக்கான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.

மேலும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியான படங்களிலும் அவர் பாடல் பாடியுள்ளார். இதில் பல பாடல்கள் ரசிகர்களிடையே ஹிட்டடித்து உள்ளது. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவருடைய வருங்கால கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், இவருடன் முடிவில்லா என்னுடைய சாகச பயணம் தொடர்கிறது  என்று அவர் பதிவிட்டுள்ளார்
 

From Around the web