சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மா உண்மையாவே ஒரு சூப்பர்ஸ்டார் தான் ..?

 
1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி தமிழகம் முழுவதும் செம ஹிட் ஆனவர் பிரகதி. இந்நிகழ்ச்சியில் பாடும் போதே இவருக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல ஆடியன்ஸ் கூட்டமும் உருவானது.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழில் சில திரைப்பட பாடல்களிலும் பாடினார் பிரகதி. அதிலும் ஜீ.வி.பிரகாஷ், அனிருத் இசையமைப்பில் இவர் பாடிய பாடல்கள் ஹிட் அடித்தன. அண்மையில் யுவன் சங்கர்ராஜா இசையில் கண்ணே கலைமாணே படத்தில் வரும் ‘செவ்வந்தி பூவே’ பாடல் பிரகதியின் குரல்தான்

பிரபல பிண்ணனி பாடகியான பிரகதியின் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடீயாக்களில் வைரலாகி வரும்.தற்போது பிரகதியே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது அம்மாவை பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது அம்மா அமெரிக்காவில் போலீஸ் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார், அந்த காணொளி பலராலும் பகிரப்பட்டு வருகிறது

From Around the web