சூப்பர் சிங்கர் சீசன் 8 டைட்டில் வின்னர்  ஸ்ரீதர் சேனா..!

 
வெற்றியாளராக மகுடம் சூடப்பட்ட ஸ்ரீதர் சேனா
சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனா அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை ஆரம்பித்தில் இருந்தே வழி நடத்தி வந்த அனுராதா ஸ்ரீராம், கே.எஸ். சித்ரா, எஸ்.பி.பி. சரண், பென்னி தயாள் உள்ளிட்ட நடுவர்களும் பங்கேற்றனர். மா.க.ப. ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் நேரலையில் ஒளிப்பரப்பானது.

இறுதிப்போட்டிக்கு அபிலாஷ், பரத், அனு, முத்து சிற்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானஸி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பிரமாண்டமாக துவங்கிய சூப்பர் சிங்கர் 8ல் இரண்டு சுற்றுகள் இடம்பெற்றன. இவ்விரண்டு சுற்றிலும் ஆறு போட்டியாளர்களும் சிறப்பாக பாடினர்.

அவர்களில் மக்களிடம் 33 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றும் சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் டைட்டில் வின்னராக ஸ்ரீதர் சேனா அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையை இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன் வழங்கினர்.

நிகழ்ச்சியின் முதல் ரன்னர்-அப்பாக பரத் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக போட்டியிட்ட அபிலாஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார். சூப்பர் சிங்கர் சீசன் 8 வெற்றியாளராக ஸ்ரீதர் சேனா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

From Around the web