விபத்தில் சிக்கிய சூப்பர் சிங்கர் பாடகி..!!

 
11

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரின் 6வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரக்‌ஷிதா சுரேஷ். இவர், அந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்வாகவில்லை என்றாலும், இறுதிப்போட்டி வரை முன்னேறி 2வது இடத்தைப் பிடித்தார்.

அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடி வந்த இவருக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தெலுங்கில் தான் பணியாற்றிய ‘எவடே சுப்ரமணியம்’ படத்தில் பாட வாய்ப்புக் கொடுத்து சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் பாடி வந்த இவருக்கு ‘வந்தால் ராஜாவாகத்தான் வருவேன்’ படத்தில் ஹிப்ஹாப் தமிழா வாய்ப்புக் கொடுத்தார். 

Rakshita Suresh

அதன் பின்னர் பல சிங்கிள்களை பாடிய இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தியில் ‘யானே யானே’, வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’, கோப்ரா படத்தில் ஏலே இளஞ்சிங்கமே, பொன்னியின் செல்வன் படத்தின் அகநக தெலுங்கு வெர்ஷன், வீர ராஜ வீரா பாடலின் கன்னட வெர்ஷன் உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார். 

இந்த நிலையில் மே 7 அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கியதாக தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பதிவிட்டு இருக்கும் பதிவில், “இன்று நான் ஒரு பெரிய விபத்தைச் சந்தித்தேன். நான் இன்று காலை மலேசியாவில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது நான் ஓட்டி வந்த காரானது சாலையில் இருந்த தடுப்பான் மீது மோதி சாலை ஓரத்தில் வந்து விழுந்தது.

என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் 10 நொடிகளில் என் கண்முன்னே வந்து சென்றது. காரில் இருந்த ஏர் பேக்குகளுக்கு நன்றி. இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். நடந்தவற்றை நினைக்கும் போது நடுக்கம் ஏற்படுகிறது. கார் ஓட்டுநர், நான் மற்றும் முன்னிருக்கையில் இருந்த சக பயணிகள் யாவரும் வெளியில் சில காயங்களுடனும், உள்ளே சில காயங்களுடனும் உயிர் தப்பினோம் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உயிர் பிழைத்தது அதிஷ்டம்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

From Around the web