நாளை தனுஷ் படத்தின் சூப்பர் அப்டேட்..ரசிகர்கள் குஷி..!
தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’ராயன்’ என்ற படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார் என்பதும் இது அவரது 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷின் சகோதரி மகன் வருண் என்பவர் ஹீரோவாக நடிக்கும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் ஒரு படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தான் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தனுஷ் - சேகர் கம்முலா இணையும் படத்தின் டைட்டில் வீடியோ வரும் 8ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் இருக்கும் நிலையில் அதே நாளில் ’ராயன்’ மற்றும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ஆகிய படங்களின் அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.