சர்ச்சையில் சிக்கிய சூப்பர்ஸ்டார்...! ரஜினி என்ன வேற்று கிரகத்திலா இருக்காரு?
ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. அதிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இதை தொடர்ந்து வேட்டையன் திரைப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்தில் பகத் பாஸில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்ததால் இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனாலும் இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதன் பின்பு தற்போது லோகேஷ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகின்றார் ரஜினிகாந்த். இந்த படத்தில் 38 வருடங்களுக்கு பிறகு சத்யராஜ் ரஜினியுடன் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றன. அதனால் இந்த படம் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்றைய தினம் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலைச் சரிவில் உயிர் இழந்த 7 பேர் தொடர்பில் செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் வினாவிய போது அதற்கு அவர் அளித்த பதில் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனை ப்ளூ சட்டை மாறனும் வைத்து விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய தினம் விமான நிலையம் வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் திருவண்ணாமலையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பிலும் அதில் உயிரிழந்த ஏழு பேர் தொடர்பிலும் கேள்விகளை எழுப்பி உள்ளனர். அதற்கு அவரோ எதுவும் தெரியாதது போல எப்போ.. ஓ மை காட்.. சாரி.. என சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
இந்த விஷயத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் தள பக்கத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் போது கைதானவர்களை யார் அந்த ஏழு பேர் என்று கேட்டார். இப்போது திருவண்ணாமலை சம்பவம் தொடர்பில் கேட்டதற்கு என்ன நடந்தது? எப்போது நடந்தது என்கின்றார்? அதிலும் ஓ மை காட் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தலீவரின் அதிரடி பஞ்ச்கள்.
நோ கமெண்ட்ஸ்,
தெரியாது,
எப்போ?,
ஓ மை காட்’
என்று பதிவிட்டிருக்கிறார்.
தற்போது ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட ட்வீட்டுகள் ட்ரெண்டாகிவருகின்றன.
தலீவரின் அதிரடி பஞ்ச்கள்:
— Blue Sattai Maran (@tamiltalkies) December 9, 2024
நோ கமண்ட்ஸ்.
தெரியாது.
எப்போ?
ஓ மை காட்.